Monday, March 23, 2020

இல்லம் திரும்பு திங்கமே ...!!!

எரியும் விளக்கை ஏந்தியே
யாரைத் தேடிப் போகிறாய் ?
அருவ மான இறையையா
அலைகள் தின்ற தாயையா?
இருளில் அச்ச மின்றியே
இதயம் தொலைத்த அன்பையா ?
வருந்த வேண்டா கண்மணி
வருவா ளன்னை கனவிலே!
தேர்வு திட்டத் தாலுளம்
தேவை யின்றித் தவிக்குதோ?
ஆர்வம் சிறிது காட்டினால்
அனைத்தும் வெற்றி யாகுமே !
சோர்ந்தி ருந்தா லாகுமா
சோத னையும் தீருமா ?
யாரும் உன்னை தேடுமுன்
இல்லம் திரும்பு தங்கமே !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment