Monday, March 23, 2020

ஜல்லிக்கட்டு முரட்டுக்காளை ...!!!

ஜல்ஜல் ஜல்லெனச் சந்தத் தோடு
சலங்கை கொஞ்ச வருகிறது !
செல்செல் செல்லென உந்தித் தள்ளத்
திமிறி யோடத் துடிக்கிறது !
வெல்லும் முறையினைப் பயிற்று வித்தோன் 
வியக்கும் வண்ணம் பாய்கிறது !
வல்ல மைமிக்க வீரர் களையும்
மடக்கித் தள்ளி வெல்கிறது !!

திமிலைப் பிடித்திட முரட்டுத் தனமாய்ச்
சீற்றம் கொண்டு முறைக்கிறது !
நிமிர்ந்த நடையுடன் சுற்றி வந்து
நெஞ்சம் பதைக்கச் செய்கிறது !
மமதை யுடனது மைதா னத்தை
வட்ட மிட்டுச் செல்கிறது!
தமிழர் மதித்திடும் ஜல்லிக்கட்டைத்
தரணி வியந்து பார்க்கிறது !!

சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment