Monday, March 23, 2020

பிறந்தநாள் வாழ்த்து ...!!! (13:01:2020 )

எல்லோரும் கொண்டாடும் பேறு பெற்றோன் !
ஏழிசைமேல் தீராத காத லுற்றோன்!
கல்லாரும் அறியுவண்ணம் பாட்டி சைப்போன்!
கனிவோடு திறமைகளை ஊக்கு விப்போன்!
வல்லானின் திருவருளால் சீர்மிகுந்தோன் !
மகாகவியைத் தன்வாழ்வின் மூச்சாய்க் கொண்டோன்!
பல்லோரும் அன்போடு கூடி ஒன்றாய்
பல்லாண்டு வாழ்கவென வாழ்த்து வோமே !!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் க.ரவி அண்ணா🎊🎊🎉🎉🎈🎈🎁🎁🎂🎂🍧🍧🍔🍔🍨🍨🍫🍫
நிறைநலத்துடன் நீடு வாழ்க💐💐💐💐💐

No comments:

Post a Comment