Thursday, March 26, 2020

பறவைகளே


பரந்த வானில் கூட்டாகப்
பறக்கும் வண்ணப் பறவைகளே!
இரையைத் தேடிச் சென்றீரோ
இடத்தை மாற்ற விரைந்தீரோ?
உரிமைக் காகப் போரிடவோ
உரத்துச் சொல்லிச் செல்லுங்கள் !
புரித லோடு வாழுமுங்கள்
பொறுமை யெமக்குத் தாருங்கள் !!
திறந்த வெளியில் இனத்தோடு
சேர்ந்து கூட்டாய்ச் செல்கின்றீர்!
சிறகு விரித்தே உயரத்தில்
சிறிய புள்ளி களாய்த்தெரிந்தீர்!
மறந்தும் சீனா செல்லாதீர்
மறுத்தால் தொற்றுக் காளாவீர்!
துறந்து விடவோ மனமில்லை
துரித மாகத் திரும்பிடுங்கள்!!
சியாமளா ராஜசேகர்
படம் - வித்யா மனோகர்

No comments:

Post a Comment