Tuesday, April 28, 2020

அந்தாதி



No photo description available.
நின்னைச் சரணடைந்து நெஞ்சுருகி வேண்டியும்
இன்னு மிரங்காத தேனம்மா - நுண்மியால்
இம்மா நிலம்படு மின்னலைக் கண்டும்நீ
சும்மா விருப்பதேன் சொல் . 1.
சொல்லியழ யாருமில்லை துன்பந் தொடராமல்
வெல்லும் வழிகாட்டி மீளச்செய் - வல்லாளே
உன்னால் முடியாத தொன்றுண்டோ? தாமத
மின்னுமேன்? சூல மெடு.. 2.
எடுத்துன்ற னாட்டத்தை யின்றே தொடங்கு
நடுநடுங்கி யோடவிடு நச்சை - அடங்காமற்
குத்தாட்டம் போடும் கொரோனாவைச் சூலத்தால்
குத்தி நசுக்கியே கொல். 3.
கொன்று குவித்துக் குலைநடுங்கச் செய்யுமி(து)
என்று மடியுமென் றேங்குகிறோம் - உன்பதம்
பற்றி யுளமுருகிப் பாடினும் காவாக்கால்
தொற்றால் தொலையு முயிர். 4.
உயிராய் உறவாய் உணர்வில் நிறைந்தாய்
தயைபுரிய வேனோ தயக்கம் - துயர்துடைப்
பாயோ? தவிக்கவிட்டுப் பார்ப்பாயோ? என்செய்வோம்
நோயோடு போரிடுவோம் நொந்து. 5.
நொந்துமனம் வாடுமுன் நோக்கி யிதமளிக்க
முந்திவர வில்லையெனில் மூச்சடங்கும் - சந்ததமும்
உன்னைத் தொழுவோரை உய்விப்ப துன்கடனே
மின்னலாய்ப் பூத்துவந்து வெட்டு. 6.
வெட்டித்தான் சாய்த்துவிடு வெந்தழலால் சுட்டுவிடு
கட்டுக்குள் பூட்டிவிடு காளியம்மா - சட்டென்று
செந்நாவை நீட்டிச் சினத்துடன் கண்ணுருட்டி
வந்தவழி யோட்டிட வா. 7.
வாராது போனாலோ வையந் தனிலுன்னை
யாராரோ கண்டபடி யேசுவர் - பாராளுந்
தாயே! அதுகேட்டுத் தாங்கிடுமோ வென்னுள்ளம்
நீயே புகல்வாய் நெறி. 8.
நெறியோடு வாழ்ந்தும் நிலைத்தினைச் சுற்றும்
வெறிகொண்ட தொற்றை விரட்டு - அறியாமற்
செய்த பிழைபொறுத்துச் சீராக்க மாகாளி
தெய்வமே வாராய் சிலிர்த்து . 9.
சிலிர்த்த படிநீயும் சிம்மத்தி லேறி
உலகை வலம்வர வோடும் - நிலத்தை
உலுக்கிய தொற்று மொழிந்திட வெங்கும்
நிலைத்திடும் நிம்மதி நின்று . 10.
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் ...!!!

Image may contain: 1 person, sitting

தன்ன தந்த தந்த தனன
தன்ன தந்த தனதானா (அரையடிக்கு)
கண்ண னுன்ற னின்ப நினைவு
கண்ணி லன்பை விதையாதோ
கன்னி யின்று கண்ட கனவு
கண்ம லர்ந்து விரியாதோ
எண்ணு கின்ற நெஞ்சி லமுத
மின்னும் பொங்கி வழியாதோ
இன்மு கங்கு ளிர்ந்த பொழுதி
லின்ன லஞ்சி விலகாதோ
நண்ணி வந்து கொஞ்சி மகிழ
நன்மை யும்பெ ருகிடாதோ
நம்மை விஞ்ச வெந்த உறவு
நன்னி லங்க ருதிடாதோ
வண்ண மென்ற சந்த மழையில்
மன்ன னொன்றி நனையாயோ
மண்ணி லென்று முன்ற னுளமும்
வண்மை கொண்டு திகழாதோ?
சியாமளா ராஜசேகர்

அவையடக்கம் .... வண்ணப் பாடல் ...!!!


தன்னதன தானதன
தன்னதன தானதன
தன்னதன தானதன தனதானா ( அரையடிக்கு)
வண்ணமெழு மாவலொடு
கண்ணிமைகள் மூடவிலை
வன்னிகையு மோயவிலை விரலோடே
வன்மையொடு நானெழுத
மின்னிவரு பாடல்களை
மன்னுதலு மார்புரிவ ரறியேனே
சின்னவளெ னாசைகளும்
விண்ணளவி லேபெரிது
திண்மையுட னேமுடியு மிறையாலே
செம்மையொடு யான்தொடர
முன்னிலையி லேயுலவு
செம்மொழியு மானவளி னருளாலே
எண்ணியது போலெழுத
வன்னையவ ளால்முடியு
மென்னறிவு மேதுமிலை தெளிவீரே
இன்னலற நூறெழுத
நன்னடையி லேவனைய
என்னுளவளே நிறைய வருவாளே
தண்மையுட னேபயில
உண்மையொடு மாவரத
தன்னிகரி லாதகுரு வருளோடே
தன்னிலையி லேதவறை
மன்னியென வேயுருகு
தன்மையுட னேதயவு புரிவீரே !!
வன்னிகை - எழுதுகோல்
வன்மை - அழகு
தண்மை - எளிமை
சியாமளா ராஜசேகர்

சோலை வாழ்த்து ...!!! வண்ணப் பாடல் !!



தனதனன தான தனதனன தான
தனதனன தான தனதான (அரையடிக்கு)
கலைமகளு லாவு மினியதமி ழோடு
கவிதையுற வாடி மகிழ்சோலை
கடலலைக ளாக விடைவெளியி லாது
கவிமலர்கள் வாச மிகுசோலை
மலையளவு ஞான மிகுவரத ரோடு
மரபுவிளை யாடு கவின்சோலை
மனமகிழு மாறு பலவகைமை யோடு
மரபுபயில் வோரும் புகழ்சோலை
இலையெனவெ னாது கவிதைவிழை வோரை
இணையவழி நாடி வருசோலை
இரவுபக லாவ லொடுபயில நாளு
மிதயமகிழ் பாவ லரினாலை
தலைவனெனு மாண வமொருதுளி யிலாது
சரபமென வீயு மொருசோலை
தகைமையொடு பாரி லுலவுமெழி லோடு
தமிழினிய சோலை மிகவாழி!!
சியாமளா ராஜசேகர்

கடவுள் வாழ்த்து ...வண்ணப் பாடல் ...!!!

தனதனன தன்னதன தனதானா
தனதனன தன்னதன தனதானா
விரலசைவில் வண்ணமது விளையாட
விழையுமென தெண்ணமது நிறைவேற
அருணைமுனி நன்மையினை யருளாயோ
அறுகணியும் முன்னவனி னருளாலே
கரிமுகனை யெண்ணிநிதம் பணிவேனே
கவியமுது கன்னலென வழியாதோ
குருபரனி னண்ணனுனை நினைவேனே
குமரனொடு பொன்மயிலில் வருவாயே !
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் ...நன்றி ...!!!

தந்த தான தந்த தான
தந்த தான தந்தானா ( அரையடிக்கு )
நன்றி யோடு கந்த வேளை
நம்பி நானு மன்போடே !
நன்கு பாட நெஞ்சில் நாளும்
நங்கை யாசை கொண்டேனே !
தென்ற லாக வந்த தோடு
சிந்தை மேவி நின்றாயே!
சிம்பி யாடு சந்தம் நூறு
செந்தில் நாத தந்தாயே !
இன்ப வானில் மஞ்சு போல
வின்று மோடு கின்றேனே !
எந்த வேளை யென்ற போது
மென்ற நாவில் வந்தாடே !
மன்றில் நீல கண்ட னாரின்
மைந்த னேபு கழ்ந்தேனே !
வண்டு தேனை யுண்டு பாடும்
மங்கை யாய்ம கிழ்ந்தேனே !!
சியாமளா ராஜசேகர்

Thursday, April 23, 2020

வண்ணப் பாடல் ....!!!( காதல் )



தனன தந்த தனன தந்த
தனன தந்த தனதான ( அரையடிக்கு )
கனியு மன்பி லுருகி நெஞ்சு
கவலை யின்றி உழலாதோ
கடுகி வந்த வினைய கன்று
கனவு கண்டு மகிழாதோ
உனைநி னைந்து கவிவ னைந்த
உறவி லின்பம் பெருகாதோ
உளறு கின்ற மொழியி லென்று
முனது கொஞ்ச லறிவேனே
தனிமை வென்று படிய டைந்து
சரண மென்று பணிவேனே
தயைபு ரிந்து விழிதி றந்து
தழுவ வந்தி மறையாதோ
இனிவி ரும்பி யுயிர்க லந்த
இதழ்க ளுண்டு மகிழ்வேனே
இடைமெ லிந்த வழகு மங்கை
இசையி லொன்றி நனைவேனே !!
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் ...!!!

தாத்தத்த தத்தன தான தனதானா
தாத்தத்த தத்தன தான தனதானா
ஆட்டத்தை விட்டிடு நாச மறியாயோ
ஆட்டிப்ப டைத்தது போது மழிவாயே
வாட்டிச்ச ரித்ததை ஞாலம் மறவாதே
வாக்குப்ப லித்திடும் நீயு மொழிவாயே
நாட்டைப்பு ரட்டிய பேயி துகொரோனா
நாற்றிப்பி டித்தித னோடு நெடுதீயை
மூட்டிக்கொ ளுத்திடு வோமி தனையாமே
மூச்சைப்ப றித்திடும் பாவி யெரிவாயே!
சியாமளா ராஜசேகர்

Image may contain: flower

வண்ணப் பாடல் ....!!!( காதல் )

வண்ணப் பாடல் ....!!!
* * * * * * * ** * * * * * * * * *
தாந்தன தானன தந்தன தான
தாந்தன தானன தனதானா ( அரையடிக்கு )
ஓங்கிய மாமர மொன்றினி லாட
ஓம்பிய தோழியி னருகோடே
ஊஞ்சலி லாடிடு மொண்டொடி யாளை
ஊர்ந்திடு மேகமு மறியாதோ
மாங்கனி வீழம டந்தையு மாட
வாஞ்சையில் மேனியை நனையாதோ
மாந்திய போதுக ருங்குயி லாளும்
வாங்கிய மாயிசை பொழிவாளே
ஈங்கொரு காயினில் வண்டுக ளாட
ஏந்திழை யாளவள் மிரளாளோ
ஏங்கிய வாறுபி ரிந்திடு போதி
லீன்றவள் வந்திட வொளிவாளோ
தூங்கிய போதிலு மின்புறு மாறு
தூண்டிடு மூசலின் நினைவோடே
தோன்றிடு தேயவ னன்பொடு தூது
சோர்ந்திட வேவிடல் முறைதானோ !!
சியாமளா ராஜசேகர்

Image may contain: Suriya Narayanan

வண்ணப் பாடல் ...!!!

தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன தனதானா
பற்றற்றிரு சித்தத் தெளிவொடு
சுற்றத்துட னொட்டிக் கனிவொடு
பக்கத்துணை நிற்றற் றகுமென உணராயோ
பத்திப்பெரு கித்தத் துவமொழி
பித்தத்தொடு கொட்டிப் பொழிவது
பட்டத்தொடு கற்றுப் புரிபவ ரதுவேலை
குற்றத்தைமு டக்கத் துணிவுட
னொத்துக்கொள வைத்துப் பரிவொடு
குட்டிப்பிழை சுட்டிக் களைபவ னவனோடே
கொச்சைச்சொலி லிச்சைக் கொளுமவர்
நச்சுப்படர் புத்தித் தெளிவொடு
கொட்டத்தைய டக்கிப் பொலிவுற விடுவார்யார்
ஒற்றித்திரு சுற்றத் துடனிடர்
பட்டுக்கட னுற்றுப் புவியினில்
ஒப்பற்றம திப்பைத் திறலொடு விடநேர
உட்பற்றொட ணைத்துப் பகைமுறி
நட்புக்கிணை யிற்றைக் கணமிதி
லொப்புச்சொல வொற்றை பிறவியு முளரோசொல்
வெற்றிக்கனி துய்க்கப் படையென
வச்சத்தை விரட்டித் துணைவரு
மெச்சத்தகு நட்பைத் தரணியில் மறவாதே
வெட்டிப்பொழு திற்சுற் றிடுமவர்
நட்புத்தடை பட்டுப் பிரியினும்
விட்டுத்தர வெற்றைக் குமுதவ வருவாரே!!
சியாமளா ராஜசேகர்

Sunday, April 19, 2020

நீலவானோடையில்....!!!

நேரிசைப் பஃறொடை வெண்பா...!!!
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * 
நீலவா னோடையில் நித்தம் வளையவந்து
கோலவெழில் காட்டிக் குளிர்விக்கும் - ஞாலமும்
கண்டு வியந்து கவிமலரால் போற்றிடும்
எண்ணிலா மீன்கள் இணைந்தாடும் - கண்சிமிட்டிப்
புன்னகைக்கத் தானும் பொலிவாய்ச் சிரித்தொளிரும்
பொன்முக மும்புதைந்து பூரிக்கும் - மென்முகிலுள்
கொஞ்சியுற வாடிக் குறும்புசெயும் - வஞ்சியென்
நெஞ்சை வருடும் நிலவு.

சியாமளா ராஜசேகர்

Saturday, April 18, 2020

வண்ணப் பாடல் ...!!!



தந்ததன தந்ததனத்
தந்ததன தந்ததனத்
தந்ததன தந்ததனத் தனதானா
தண்டையொலி கொஞ்சிவரச்
சங்கொலிமு ழங்கிவரச்
சந்தவொலி யுந்திகழப் பொலிவோடே
தந்ததன தந்தவெனக்
கொங்கைகள சைந்துவரத்
தங்கமுக முங்குளிரப் பதமாடும்
செண்டையிசை யுஞ்செவியிற்
கிண்கிணென வந்துவிழச்
சிந்தைமகி ழும்பொழுதிற் கனிவோடே
தென்றலது நெஞ்சுரசப்
பொங்கிவரு சிந்திசையிற்
செங்கமல மும்விரியத் துடியாதோ
கொண்டையொடு செஞ்சடையிற்
கங்கையுட னம்புலியைக்
கொண்டவனை நம்பியுளத் துறவோடே
கொன்றையணி யுஞ்சிவனைக்
கண்டுமன மின்பமுறக்
கொண்டலென வன்பில்நனைத் திடும்பேறே
பண்புநிறை யம்பிகையைச்
சந்ததமு மன்பொழுகப்
பம்பலொடு கெஞ்சியழைத் திடும்போது
பம்பையுமு ழங்கிவரத்
துந்துபிய திர்ந்துவரப்
பந்தமென வந்தருளைப் பொழிவாளே!
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் ...!!!

தனத்தத் தனந்த தனதன
தனத்தத் தனந்த தனதன
தனத்தத் தனந்த தனதன தனதானா ( அரையடிக்கு )
பசிக்குக் குழந்தை யழுதிட
வணைத்துப் பரிந்து மகிழ்வொடு
படுத்துக் கிடந்த வனையவ ளெழுவாளே
பயத்துச் சுரந்த வமுதினை
யளித்துக் கனிந்த மனமது
பரத்திக் குளிர்ந்து மகவொடு துயிலாதோ ?
இசைத்துப் பணிந்த வெளியனை
விரட்டித் தொடர்ந்த வினைகளை
எதிர்த்துத் துணிந்து களையெடு மயில்வீரா !
இடர்க்குப் பயந்த பிளையெனை
எடுத்துச் சுமந்து வருடியெ
னிளைப்பைப் புரிந்து தயவுசெய் யொருதாயாய் !
அசைத்துப் பிழிந்த துயர்களை
மடக்கிச் சிறந்த முறையினி
லடக்கத் தெளிந்த வறிவினை யருள்வாயே !
அணைப்பிற் கசிந்த விழியொடு
திருப்பொற் பதங்க ளழகினை
யடுக்கிப் புகழ்ந்து தொழுதிட வருவாயே !
வசித்தற் குகந்த விடமென
விளக்கிற் படர்ந்த வொளியொடு
மனத்தைத் திறந்து பரவெளி விடுவாயே !
மயக்கிக் கவர்ந்த குறமக
ளகத்திற் பொழிந்த மழையென
வரித்துச் சிவந்து நடமிடு பெருமாளே !
சியாமளா ராஜசேகர்

ஆட்டம் ...!!!



வானில் கரிய மேகம் சூழ்ந்தால்
மண்ணில் மயிலாடும் !
வனத்தில் தத்தம் இணைக ளுடனே
மான்கள் சேர்ந்தாடும் !
தேன்நி லாவும் உலவும் முகிலின்
திரைக்குள் ஒளிந்தாடும் !
சீண்டிப் பார்க்கும் விண்மீன் கள்கண்
சிமிட்டி உறவாடும் !
கானில் விரிந்த மலர்க ளெல்லாம்
காற்றில் கலந்தாடும் !
கள்ளை யுண்ணப் பறந்து வந்து
களிப்பில் வண்டாடும் !
வானில் வளைந்த வான வில்லில்
வண்ணம் இசைந்தாடும் !
மழைக்கு முன்னே கொடிபோல் மின்னல்
மலர்ந்தே ஒளிர்ந்தாடும் !!
மரத்தின் கிளையில் தாவித் தாவி
மந்தி விளையாடும் !
மலையின் அருவி வழுக்கிக் குதித்து
மகிழ்வில் நனைந்தாடும் !
இரவில் திங்கள் ஒளியில் அல்லி
இதழ்கள் விரித்தாடும் !
இருளில் குளத்தில் ஒளிந்த மதியும்
இனிதே குளிர்ந்தாடும் !
குருவி சிறிய அலகால் இரையைக்
கொத்திக் குதித்தாடும் !
கொட்டும் மழையில் கிளைகள் குளித்துக்
குலுங்கி மகிழ்ந்தாடும் !
பொருநை நதியி னலையில் கயல்கள்
புரண்டு புரண்டாடும்!
புல்லின் நுனியில் துளிகள் திரண்டு
பொலிவாய் நின்றாடும் !!
செந்நெற் கதிர்கள் தலையைக் குனிந்து
சிலிர்ப்பில் வளைந்தாடும் !
சிவந்த மரையும் பரிதி கண்டு
சிரித்து மலர்ந்தாடும் !!
சொந்த மாகச் சொகுசாய் அமைத்த
சொர்க்க புரிபோலும்
தொங்கும் மஞ்சட் குருவிக் கூடு
சுகமாய் அசைந்தாடும் !
அந்திப் பொழுதின் மஞ்சள் வெயிலும்
அடங்கிச் சிவந்தாடும் !
அந்தக் கணத்தில் அடையும் கூட்டில்
அன்பு மிளிர்ந்தாடும் !
தொந்த மாக நதியில் நித்தம்
தோணி மிதந்தாடும் !
தூக்க மில்லாக் கடலின் அலைகள்
துள்ளி எழுந்தாடும் !
தென்றல் காற்று தழுவிக் கொள்ளத்
தென்னங் கீற்றாடும் !
சின்னக் கிளிகள் கொஞ்சும் பேச்சைக்
கேட்டுச் சிரித்தாடும் !
கன்னங் கரிய குயிலின் இசையைக்
காற்றும் சுவைத்தாடும் !
கன்னல் கரும்பின் அழகுத் தோகை
கண்ணைக் கவர்ந்தாடும் !
கொன்றை மலர்கள் மரத்தை மறைத்துக்
கொத்தாய்க் குவிந்தாடும் !
கோடை மழையில் நனைந்த நெஞ்சம்
குளிர்ந்து சிலிர்த்தாடும் !
அன்னம் இணையோ டிணைந்து மெல்ல
ஆற்றில் அசைந்தாடும் !
அன்றில் பறவை பிரியா தென்றும்
அன்பில் உறவாடும் !
இயற்கை ஆட்டம் ஓட்டம் எல்லாம்
இறைவன் அருளாகும் !
இயல்பை விட்டு மாறி னாலோ
இழப்பு பெரிதாகும் !
உயர்வு தந்து நலத்தைப் பெருக்கி
வுவகை யுந்தருமே !
உலகில் நாளும் புதிய ஆட்டம்
உலவும் புதுசுகமே !
துயரை வென்று மீட்டு வந்து
சுகத்தைத் தந்திடுமே !
சொந்த பந்தம் கூடி யாடச்
சோர்வும் விலகிடுமே !
அயர்ச்சி யின்றி வாழ்வை வெல்ல
ஆட்டம் அவசியமே !
அதுவும் எல்லை மீறிப் போனால்
அமைதி போய்விடுமே !
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் ...!!!

தனன தான தனதான
தனன தான தனதான
தனன தான தனதான     தனதானா  ( அரையடிக்கு )

படிக ளேறி மலைமீது 
கவலை யோடு வரும்போது 
பழனி பால கனைநாடு    மனமேநீ !

பரம ஞான மருள்வானை 
யுருகு மாறு கனிவோடு
பணிய வேம யிலிலேறி    வருவானே !

கொடியு மாட வரவாட 
விடைய றாத வளியோடு
குழலு மாட மலராடு      மழகோடே !

குருகு மாட மரமாட 
மணியு மாடு மொலியோடு
குமர னாட வடிவேலும்      நடமாடி !

அடிய ரோடு துணையாக 
மழலை போலு மொழிபேசி 
யருள வோடி யுறவாட     விழைவானே !

அழகு நாவல் மரமீது 
கிழவி யோடு கதைபேச
அருவி யாக வுளமாடி     நனையாதோ !

முடிவி லாத துயரோடு 
மனமும் வாடி யலையாது 
முருக னேயு னருளாசி     பொழியாயோ !

முதுமை நோயி லுழலாம
லுனது பாத மலராக
முறுவ லோடு கரைசேர     அருள்வாயே !!


சியாமளா ராஜசேகர் 


Thursday, April 16, 2020

வண்ணப் பாடல் ...!!!

வண்ணப் பாடல் ..!!!
***************************
தனத்தத் தனந்த தனதன 
தனத்தத் தனந்த தனதன 
தனத்தத் தனந்த தனதன     தனதானா ( அரையடிக்கு )

பசிக்குக் குழந்தை யழுதிட 
வணைத்துப் பரிந்து மகிழ்வொடு
படுத்துக் கிடந்த வனையவ       ளெழுவாளே

பயத்துச் சுரந்த வமுதினை 
யளித்துக் கனிந்த மனமது
பரத்திக் குளிர்ந்து மகவொடு   துயிலாதோ ?

இசைத்துப் பணிந்த வெளியனை 
விரட்டித் தொடர்ந்த வினைகளை 
எதிர்த்துத் துணிந்து களையெடு     மயில்வீரா !

இடர்க்குப் பயந்த பிளையெனை
எடுத்துச் சுமந்து வருடியெ
னிளைப்பைப் புரிந்து தயவுசெய்    யொருதாயாய் !

அசைத்துப் பிழிந்த துயர்களை 
மடக்கிச் சிறந்த முறையினி
லடக்கத் தெளிந்த வறிவினை     யருள்வாயே !

அணைப்பிற் கசிந்த விழியொடு
திருப்பொற் பதங்க ளழகினை
யடுக்கிப் புகழ்ந்து தொழுதிட      வருவாயே !

வசித்தற் குகந்த விடமென
விளக்கிற் படர்ந்த வொளியொடு
மனத்தை திறந்து பரவெளி      விடுவாயே !

மயக்கிக் கவர்ந்த குறமக
ளகத்திற் பொழிந்த மழையென 
வரித்துச் சிவந்து நடமிடு      பெருமாளே !

சியாமளா ராஜசேகர் 










கப்பலேறிப் போய்விடு ..!!!

கண்டம் விட்டுக் கண்டம் சென்று
காவு வாங்கும் நுண்மியே!
கண்ட துண்ட மாகக் கொத்திக்
கடலில் தூக்கி வீசுவேன்!
கண்டிப் பாகச் சொல்லி விட்டேன்
கட்டிப் போட்டுத் தீட்டுவேன்!
கண்ணில் பட்டி டாமல் நீயும்
கப்ப லேறிப் போய்விடு!
உப்புக் காற்றின் காட்டத் தில்நீ
உலர்ந்து காய்ந்து கருகிடு!
உப்பு நீரில் அரிப்பெ டுக்க
உருண்டு புரண்டு தொலைந்திடு!
உப்புத் தாளால் கிழியத் தேய்ப்பேன்
உதிரம் கொட்டும் ஓடிடு!
உப்புக் கண்டம் போட்டு விடுவேன்
உலகை விட்டே ஒழிந்திடு!!

சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் ...!!!

தன்னத்தன தானதன தனதானா
தன்னத்தன தானதன தனதானா
திண்ணத்தொடு நாடிவரு மடியார்கள்
செம்மைப்படு மாறுதவு(ம்) வடிவேலா
கண்ணைத்திற வாயழகு குருநாதா
கன்னித்தமி ழால்நிதமும் புகழ்பாடி
வண்ணக்கவி யானெழுத அருள்வாயே
மன்னித்திடு வாய்பிழைக ளறியேனே
உண்மைப்பொரு ளேயுலகி லுணர்வேனே
உன்னைத்தொழு தேனுதவ வருவாயே !!
சியாமளா ராஜசேகர்

வண்ணப்பாடல்...!!! காதல்


தனதன தந்த தனதன தந்த
தனதன தந்த தனத்தனதா ( அரையடிக்கு)
அவளொடு கொண்ட வுறவினி லின்ப
மமுதென வின்று மினிக்கிறதே
அகமதை வென்ற நடமிடு மன்பி
னடைமழை நெஞ்சை நனைக்கிறதே!
உவகையி லொன்றி யிதயம யங்கி
உயிரென நம்பி யிசைக்கிறதே
உரிமையில் வந்த விணையுட னிந்த
உலகை மறந்து துடிக்கிறதே!
கவிதைவ னைந்த கயல்விழி கண்டு
கவலைம றந்து சிரிக்கிறதே
கலைமதி கண்டு கனிமொழி யென்று
கனவில்மி தந்து களிக்கிறதே!
சுவையையு ணர்ந்து பரிவுக லந்து
சொரியுப தங்க ளணைக்கிறதே!
துணிவொடு நின்று துயரையும் வென்ற
துணையவ ளன்பு நிலைத்திடுமே!!
சியாமளா ராஜசேகர்

ஊசல் வரி ...!!!

உள்ளம் கவர்ந்தவனை ஊர்மெச்சு முத்தமனைக்
கள்ளமிலாக் காதலனைக் கன்னல் மொழிபேசி
அள்ளி அணைப்பானை அன்பில் கசிந்துருகித்
துள்ளி மகிழ்வுடன் ஆடாமோ ஊசல்
சுகந்த மலர்சூடி ஆடாமோ ஊசல் !!
குழற்கற்றைக் காதோரம் கொஞ்சி யசைந்தாட
மழைச்சார லோடு மனம்நனைந் தாட
அழகன் வரும்வழியை ஆசையுடன் பார்த்து
விழிகளும் மின்னிட ஆடாமோ ஊசல்
விரைந்து வரப்பாடி ஆடாமோ ஊசல் !!
மீசை முறுக்குடன் வீர நடைபோட்டுப்
பாசம் பொழிந்திடப் பக்கம் வருவானை
ஓசையின்றி முத்தமிட்(டு) உள்ளமதைக் கொய்வானைப்
பேசி மணமுடிக்கப் பேராவ லோடெண்ணி
வீசும் வளியுடன் ஆடாமோ ஊசல்
விரும்பி வரவேற்க ஆடாமோ ஊசல் !!
சியாமளா ராஜசேகர்

ஆட்டம் ...!!!



ஆட்டம் ...!!!
*****************
வானில் கரிய மேகம் சூழ்ந்தால் 
மண்ணில் மயிலாடும் !
வனத்தில் தத்தம் இணைக ளுடனே 
மான்கள் சேர்ந்தாடும் !

தேன்நி லாவும் உலவும் முகிலின்
திரைக்குள் ஒளிந்தாடும் !
சீண்டிப் பார்க்கும் விண்மீன் கள்கண் 
சிமிட்டி உறவாடும் !

கானில் விரிந்த மலர்க ளெல்லாம்
காற்றில் கலந்தாடும் !
கள்ளை யுண்ணப் பறந்து வந்து 
களிப்பில் வண்டாடும் !

வானில் வளைந்த வான வில்லில்  
வண்ணம் இசைந்தாடும் !
மழைக்கு முன்னே கொடிபோல் மின்னல் 
மலர்ந்தே ஒளிர்ந்தாடும் !! 

மரத்தின் கிளையில் தாவித் தாவி 
மந்தி விளையாடும் !
மலையின் அருவி வழுக்கிக் குதித்து 
மகிழ்வில் நனைந்தாடும் !

இரவில் திங்கள் ஒளியில் அல்லி
இதழ்கள் விரித்தாடும் !
இருளில் குளத்தில் ஒளிந்த மதியும் 
இனிதே குளிர்ந்தாடும் !

குருவி சிறிய அலகால் இரையைக் 
கொத்திக் குதித்தாடும்  !
கொட்டும் மழையில் கிளைகள் குளித்துக்
குலுங்கி மகிழ்ந்தாடும் ! 

பொருநை நதியி னலையில் கயல்கள்
புரண்டு புரண்டாடும்!
புல்லின் நுனியில் துளிகள் திரண்டு
பொலிவாய் நின்றாடும் !!

செந்நெற் கதிர்கள் தலையைக் குனிந்து 
சிலிர்ப்பில் வளைந்தாடும் !
சிவந்த மரையும் பரிதி கண்டு 
சிரித்து மலர்ந்தாடும் !!

சொந்த மாகச் சொகுசாய் அமைத்த 
சொர்க்க புரிபோலும் 
தொங்கும் மஞ்சட் குருவிக் கூடு 
சுகமாய் அசைந்தாடும் !

அந்திப் பொழுதின் மஞ்சள் வெயிலும் 
அடங்கிச் சிவந்தாடும் !
அந்தக் கணத்தில் அடையும் கூட்டில் 
அன்பு மிளிர்ந்தாடும் !

தொந்த மாக நதியில் நித்தம் 
தோணி மிதந்தாடும் !
தூக்க மில்லாக் கடலின் அலைகள் 
துள்ளி எழுந்தாடும் ! 

தென்றல் காற்று தழுவிக் கொள்ளத் 
தென்னங் கீற்றாடும் !
சின்னக் கிளிகள் கொஞ்சும்  பேச்சைக் 
கேட்டுச் சிரித்தாடும் !

கன்னங் கரிய குயிலின் இசையைக் 
காற்றும் சுவைத்தாடும் !
கன்னல் கரும்பின் அழகுத் தோகை
கண்ணைக் கவர்ந்தாடும் !  

கொன்றை மலர்கள் மரத்தை மறைத்துக் 
கொத்தாய்க் குவிந்தாடும் !
கோடை மழையில் நனைந்த நெஞ்சம் 
குளிர்ந்து  சிலிர்த்தாடும் !

அன்னம் இணையோ டிணைந்து மெல்ல 
ஆற்றில் அசைந்தாடும் !
அன்றில் பறவை பிரியா தென்றும் 
அன்பில் உறவாடும் !

இயற்கை ஆட்டம் ஓட்டம் எல்லாம் 
இறைவன் அருளாகும் !
இயல்பை விட்டு மாறி னாலோ 
இழப்பு பெரிதாகும் !

உயர்வு தந்து நலத்தைப் பெருக்கி 
வுவகை யுந்தருமே !
உலகில் நாளும் புதிய ஆட்டம் 
உலவும் புதுசுகமே !

துயரை வென்று மீட்டு வந்து 
சுகத்தைத் தந்திடுமே !
சொந்த பந்தம் கூடி யாடச் 
சோர்வும் விலகிடுமே !

அயர்ச்சி யின்றி வாழ்வை வெல்ல
ஆட்டம் அவசியமே !
அதுவும் எல்லை மீறிப் போனால் 
அமைதி போய்விடுமே !

சியாமளா ராஜசேகர் 



Monday, April 13, 2020

வண்ணப் பாடல் ...!!!

வண்ணப் பாடல் ...!!!
*****************************
தத்தன தனந்த தத்தன தனந்த 
தத்தன தனந்த     தனதானா ( அரையடிக்கு)

சித்திரை பிறந்த விக்கணம் மகிழ்ந்து 
     சித்தமும் மலர்ந்து     குளிராதோ ?
சிற்பர மெழுந்து முத்தொடு கனிந்து 
      செப்பிட நெகிழ்ந்து     மனமாட !

பித்தமு மடங்க வற்புத மருந்து 
     பெற்றிட விழைந்து    துதிபாட !
பித்தனும் விழைந்து நற்கதி வழங்க 
   பெற்றினி லமர்ந்து     வருவானே !

முத்தமிழ் மொழிந்து குட்டுடன் வணங்க 
     முற்பட விறைஞ்சி      யடிபேண 
முப்புற முழன்ற நச்சது நடுங்க 
     மொய்ப்பொடு நிமிர்ந்து     வரவேணும் !

எத்தனை நயந்தும் பற்றுடன் நினைந்து
     மிப்படி வருந்த     விடலாமோ ?
இக்குறை களைந்து பொற்புட னியங்க
     இப்புவி விளங்க      அருள்வாயே !!  

சியாமளா ராஜசேகர் 
      
  

சித்திரை திருநாள் வாழ்த்துகள் 

Saturday, April 11, 2020

வண்ணப் பாடல் ...!!

வண்ணப் பாடல் ...!!!
***************************
தான தனதன தான தனதன 
தான தனதன    தனதானா ( அரையடிக்கு ) 

ஆதி சிவனுடன் நாண மிகநட 
மாடு முமையவள்    மகனாரை  
ஆசை யுடன்குற மாது தழுவிடும்
ஆறு முகமுடை    மணவாளா !

தேசு நிறைபவ ஞான வடிவொடு
தேவ மகளுட     னருள்வேளே
தேடு விழிகளில் நேய முடனொரு 
தீப தரிசன    மருள்வாயே !

நீதி நெறியினை நாளு மருளிட 
நீல மயினிலில்    விரைவோடே
நேரும் வினைகளும் மாறி விலகிட 
நீயும் பரிவொடு     வருவாயே !

வீதி வழிகளில் யாரு மிலையென 
வேல னுனதுளம்    நினையாதோ 
வேறு வழியற வாடு மனிதரும் 
மீள வரமது     புரிவாயே !!

சியாமளா ராஜசேகர் 


எண்சீர் வண்ண விருத்தம் ...!!!

எண்சீர் வண்ண விருத்தம் ...!!!
*****************************************
தானதன தானதன தானதன தந்தா
தானதன தானதன தானதன தந்தா 


வீதிதனி லேயுலவி டாமலிரு நன்றே 
     வேதனையு மாயுமொரு வேளைவரு மென்றே 
சாதிமத பேதமற நாடுயரு மென்றே 
     தாவிவரு மாவலொடு பாடுபடு நன்றே 
பீதியொடு நாள்விரையும் பேரவல மிங்கே 
    பேரிடியி லேயுலகு வாடுவது கண்டே 
மாதவனை நாடியிரு பாதம்பணி நன்றே 
    மாவிடரு மோடிவிடும் மேதினியி லிங்கே !!

சியாமளா ராஜசேகர் 

பன்னிருசீர்ச் சந்த விருத்தம் ... கண்ணன் !!

Image may contain: 1 person
பாலோடு பாயசம் பரிவோடு நான்தரப்
பருகநீ யோடிவருவாய் !
பாராத தேனடா? கோபமேன் கூறடா
பரிவுடன் தேடிவருவாய் !
காலோடு தண்டையின் கலகலெனு மொலியிலே
கல்மனமு முருகநின்றேன் !
காதிலுன் நாமமே கேட்டவுட னன்பிலே
கண்களும் பொழியநின்றேன் !
மாலோனை நெஞ்சிலே நித்தமும் பூசித்து
மன்றாடி நெக்குருகுவேன் !
மாதவா மாயவா கோவிந்த கேசவா
மகிழ்வுடன் பாட்டிசைப்பேன் !
தாலாட்டு நான்பாட நீகேட்டு விழிமூடு
தாயாக அன்புசெய்வேன் !
தாமரைப் பாதத்தை முத்தமிட் டாசையில்
தாவியே உனையணைப்பேன் !

கண்ணனே உன்னைநான் கண்டதும் துள்ளியே
கைகூப்பி வருகவென்பேன் !
கார்முகில் வண்ணனே ! கோகுலச் செல்வனே!
கனிவோடு புன்னகைப்பேன் !
எண்ணிலா ஆசைகள் நெஞ்சிலே உழலுதே
என்மனம் யாரறிவரோ ?
இனியனே சொல்லடா ! கெஞ்சினேன் கொஞ்சினேன்
இன்னுமேன் இளகவிலைநீ ?
புண்ணான உள்ளமும் பூரித்து மகிழவே
பூவோடு மணமாகவா !
புதிரான நோய்த்தொற்றை எளிதாக ஊதியே
பூண்டோடு கொல்லநீவா !
வண்டமிழ்த் தேன்பருக வடிவாக இக்கணம்
மறவாது குழலூதிவா !
மண்ணிலே மக்களின் துயர்களை ஒழித்திட
மருந்தென நீவருகவே !!
( பன்னிருசீர்ச் சந்த விருத்தம்)
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் ...!!!

No photo description available.

தான தான தானான தானத் தனதான
தான தான தானான தானத் தனதான
ஈச னாரை நாள்தோறும் பாடித் தொழுவேனே
ஈடி லாத தேவார மோதிக் கனிவோடே !
நீச ரோடு நாயேனும் மோதற் றகுமோசொல்
நீடு வாழ வேறாரை நாடித் திரிவேனே !
காசி நாத னேநீறு பூசித் தெளிவோடே
கால னோடு போராட நீசற் றருளாயோ !
வாசம் வீசு பூமாலை தோளிற் பொலிவோடே
மாசி லாத மீனாளின் நேயப் பெருமானே ..
சியாமளா ராஜசேகர்

ஆனந்தக் களிப்பு ..!!!




கண்ணனைக் காணமல் நின்றாள் - தன்
கண்களை ஆலிலை யால்மூடிக் கொண்டாள் !
வெண்ணிலா வான்வரும் மாலை - அவள்
வெட்கத்தில் புன்னகை பூத்திடும் சோலை !!
தாவணி மேனியை மூடும் - அவள்
தாமரைப் பூமுகம் மன்னனைத் தேடும் !
காவலை மீறியே கெஞ்சும் - மனம்
காதலில் தில்லானா பாடியே கொஞ்சும் !!
பாவையின் கண்விடும் தூது - கரும்
பச்சையில் தோடுடன் ஆடிடும் காது !
வாவென்று கூப்பிட்ட போது - அவன்
மார்பினில் அன்புடன் சாய்ந்தாளே மாது !!
செக்கச் சிவந்தது கன்னம் - அந்தச்
செவ்வந்தி மாலையில் இன்னுந்தான் மின்னும் !
சொக்கித்தான் போய்விடும் உள்ளம் - அந்தச்
சுந்தர னின்பேச்சில் இல்லையே கள்ளம் !!
கைவளை கொஞ்சிடும் சத்தம் - இரு
காதுக ளோரம் வழங்கிடும் முத்தம் !
மைவிழி யாள்பாடும் சந்தம் - அந்தி
மையலில் தித்திக்கச் சேர்ந்தாடும் பந்தம் !!
வைகை நதிக்கரை யோரம் - அலை
வாவென்று முத்திட்டக் கால்களில் ஈரம்!
பொய்கையில் ஆடிடும் அல்லி - அது
பூத்திடும் பெண்ணிவள் காதலைச் சொல்லி !!
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் ...தமிழ் ...!!!

வண்ணப் பாடல் ..!!!
*****************************
தனன தனனதன தனன தனனதன
தனன தனனதன தனதான (அரையடிக்கு)
அமுத மெனவினிய விளமை யுடனுலகி
லழகு மொழிகளிலை தமிழ்போலே !
அரிய மரபிலத னகல மிமயமென
அடையும் பெருமைகளு முயர்வேதான் !
சமய நெறிகளையு மறிய வுதவுவது
தமிழை விடவுமெது புகல்வீரே !
தகைமை மிகுமொழியின் வளமை நனிபெரிது
சரப மதிலுளமும் நனையாதோ ?
இமிழு மெளிமையுட(ன்) அகர முத(ல்)னகரம்
இசைய வருமொழுகு நதிபோலும் !
இணைய மதிலுலவும் மதுர மணம்பரவும்
இதய மதில்நிறையு மறவோமே !
நமது தமிழமுதை மனமும் பருகியெழ
நலிவு சிறிதுமற விருகாவல் !
நலமும் வளம்பெருகும் புவியி லரசுசெயும்
நனவு நடவுமினி அறிவாயே !!
சியாமளா ராஜசேகர்

அசைந்தாடி வா ...!!!


காலத்திற் கேற்றாற்போல் காஸ்ட்யூம் அணிந்தாயோ
கோல வெழில்கண்டால் கோகுலமே வாய்பிளக்கும்
பாலுடன் பட்டரும் பாசத்து டன்தருவேன்
நீலவண்ணா நீயோடி வா .
கையிலே கொம்பெதற்கு? கௌ(cow)மேய்க்கப் போனாயோ?
பையநின் பேரழகு பார்ப்போரை ஈர்த்துவிடும்
மையலுடன் கோபியரும் வந்தணைத்துக் கொஞ்சுவார்
வையகமே கொண்டாடும் வா.
அடடாவுன் ஹேர்ஸ்டைல் அசத்துதே ! உன்றன்
நடைகூட ஸ்டைலாக நைஸா யிருக்கத்
தடைபோட மாட்டார் தயங்காம லிங்கே
மிடுக்கோடு மின்னலாய் வா.
குழலெங்கே கண்ணாவுன் கோபிய ரெங்கே
விழியில் சிறுகுறும்பு மின்னு கிறதே
மழையில் நனைந்தாலென்? மௌனமா யிங்கே
அழகாய் அசைந்தாடி வா.
ஓவியம் - கேசவ்ஜி
சியாமளா ராஜசேகர்

இடியிடித்திட ...!!!

இடியிடித்திட வுளமசைந்திட எழுமொலியதன் சத்தம்
வடிவழகிய முகில்குளிர்ந்திட வளிவருடிடும் சித்தம்
செடிகொடிகளின் மதுமலர்களும் சிலிர்த்திசைத்திடும் சந்தம்
சடசடவென மழைத்துளிகளும் தரைக்களித்திடும் முத்தம் !!
அடடடவெனப் பெருவியப்பினில் அகமகிழ்ந்திட நனைந்தேன்
படபடவெனப் பெயல்பொழிந்திடப் பரவசத்தினில் பனித்தேன்
தொடத்தொடத்தொடர்ந் திடும்கொரனவும் தொலைந்திடுமென நினைத்தேன்
சுடச்சுடவெழும் கவிதையில்மனம் சுகம்சுகமெனத் திளைத்தேன் !!
சியாமளா ராஜசேகர்