Wednesday, March 14, 2018

மயூரமாடும் !!


சூழுங் கருத்த மேகங் கண்டால்
***தோகை விரித்து மயூர மாடும் !
ஏழு வண்ண வான வில்லும்
***எடுப்பாய்த் தோன்ற மஞ்ஞை சிலிர்க்கும் !
வாழும் வனத்தில் இணையை மயக்க 
***வண்ணக் கலாபம் வனப்பாய் விரிக்கும் !
வேழ முகத்தோன் தம்பி யாரை
***விரும்பித் தன்மேல் சுமந்து பறக்கும் !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment