Tuesday, March 13, 2018

போற்றுவோமே ...!!!



அன்னைமரி ஈன்றெடுத்த அழகு பாலன்
***அகிலமுய்ய வந்துதித்த தேவ தூதன் !
பொன்போலும் விண்மீகள் ஒளியைச் சிந்தப்
***புல்லணையில் கண்ணயர்ந்த புனித மைந்தன் !
நன்னெறியைப் புகட்டிடவே மண்ணில் தோன்றி 
***நானிலத்தில் அற்புதங்கள் செய்த நாதன் !
மன்னுயிர்க்காய்ச் சிலுவையினை சுமந்த கோவின் 
***மகிமைகளை வாயாரப் போற்று வோமே !
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment