Thursday, July 4, 2019

எண்சீர் வண்ண விருத்தம் ...!!!


எண்சீர் வண்ண விருத்தம் ...!!!
******************************************
தனதன தத்தத் தனதன தத்தத் 
தனதன தத்தத் தனதன      தனதானா 

பணிவொடு குட்டிப் பரிவொடு தொட்டுப் 
     பதமலர் பற்றித் தொழுதிட      மகிழ்வோனே !
துணையென நெற்றித் திலகமு மிட்டுத்
     துயரினை விட்டுத் தெளிவுற      அருள்வாயே !
பிணியொடு சுற்றிக் கவலது முற்றிப் 
     பிரிவினை யுற்றுக் கதியிலை      கணநாதா !
கனிவுட னிற்றைப் பொழுதினி லொற்றைக்
      கரிமுக வெற்றிக் கனிதர      வருவாயே !!

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment