Tuesday, February 17, 2015

சிவ சிவ சிவனே ...!!!





பிறை சூடிய பித்தனே 
அர வணிந்த அத்தனே 
கயிலை வாழ் சித்தனே 
சுடலை நீறணி சுத்தனே ...!! 

நெற்றியில் கண் கொண்டோனே 
கங்கை சடையில் வைத்தோனே 
புலித் தோலை அணிந்தோனே 
திரி சூலம் ஏந்தியோனே ....!! 

தில்லை வாழ் கூத்தனே 
லிங்கத் திரு மேனியனே 
சடா முடி தரித்தோனே 
தன்னில் சக்தி இணைத்தோனே....!! 

தாண்டவ மாடும் சபேசனே 
திரிபுர மெரித்த ஈசனே 
பண் ணிசைக்க மகிழ்வோனே 
பஞ்ச பூதமாய் நிறைந்தோனே ....!! 

ஆல கால முண்டோனே 
நீல கண்ட நாயகனே 
மண் பிட்டுக்கு சுமந்தோனே 
நரியைப் பரி ஆக்கியோனே ...!! 

காமனைக் கண்ணால் எரித்தோனே 
காலனைக் காலால் உதைத்தோனே 
ஜோதிர் லிங்கமாய் இருப்போனே 
ஜோதியாய் காட்சி தந்தோனே ...!! 

சிவாய நமவெனச் சொன்னால் 
அபாய மிலையென வருவாய் 
உபாய மிதுவென உணர்த்தி 
அபய மளிப்பாய் சிவனே ....!!!


3 comments:

  1. https://soundcloud.com/su-ravi/0shjigswjozxசம்பு நடம்பயிலும் தருணம்

    ஸ்ப்தஸ்வங்கள் உடன் உதயம்.

    விரிசடை முகிலென வான்மேல் பரவிட

    பொறியுறு நுதலிடை எரியழல் நடமிட

    ஏழுலகங்களும் தூளி பறந்திட

    பூத கணங்களின் கோஷ மெழுந்திட

    கங்கை குலுங்கிட, தண்மதி உருகிட

    அங்கை எழுந்தொரு செந்தழல் ஆடிட

    கைத்தா மரையினில் டம டம டம வென

    வைத்தொரு டமருகம் இடியென ஒலிதர

    சிந்தை மயங்கும் நந்திம்ருதங்கம்

    மேளம், தாளம், பஞ்சமுகம், பறை

    கொட்டும் இடக்கை குமுறும் உடுக்கை

    சிவமே லயமாய், சிவமே ஸ்ருதியாய்

    விசை நடனம் தரும் இசை வடிவம்.

    சம்பு நடம்பயிலும் தருணம்

    ஸ்ப்தஸ்வங்கள் உடன் உதயம்.



    பார்க்க, படிக்க, ரசிக்க…

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. https://soundcloud.com/su-ravi/0shjigswjozx

    ReplyDelete