Tuesday, May 8, 2018
தூது சுமந்த சிறகுகள் ....!!!
கண்ணகி சான்றிதழ் ...!!!
********************************
அக்கரைச் சென்ற மன்னனை எண்ணி
***அலைகடல் போலுளம் பொங்கும் !
இக்கரை மீதில் துடித்திடு மிதயம்
***இசைக்கையில் சோகமே மிஞ்சும் !
திக்கறி யாமல் தவித்திடும் படகாய்த்
***தியங்கிய நிலையினி லஞ்சும் !
விக்கிடும் போது நினைப்பது மவனோ
***விழைந்திடும் இக்கணம் நெஞ்சம் !!
தேனினு மினிய வார்த்தைகள் சொல்லிச்
***சென்றவன் மனநிலை யறியேன் !
ஏனினும் அவனும் திரும்பிட வில்லை
***ஏங்கியே இதயமும் கசிந்தேன் !
மேனியும் துவள இடையது மெலிய
***மேகலை நழுவிடக் கண்டேன் !
வானிலே பறக்கச் சிறகுக ளிருந்தால்
***வரமென அவ்விடம் செல்வேன் !!
சோலையில் கொஞ்சும் பைங்கிளி உன்னைத்
***தூதுவி டுத்திட நினைத்தேன் !
காலையில் கிளம்பி காதலைச் செப்பக்
***கடுகிநீ சிறகுகள் விரிப்பாய் !
வேலையாய்ச் சென்ற தலைவனைத் தேடி
***வேதனை உணர்ந்திடச் செய்வாய் !
பாலையி லவனைக் கண்டதும் தேற்றிப்
***பக்குவ மாகவே சொல்வாய் !!
நல்லதோர் சேதி கொண்டுநீ வந்தால்
***நன்றியி லிருவிழி பனிக்கும் !
நெல்மணி தந்துன் சிறகினை வருட
***நெஞ்சினில் நிம்மதி பிறக்கும் !
சொல்லெடுத் தடுக்கித் தூதினை மெச்சிச்
***சுந்தர கவிதைகள் வடிக்கும் !
முல்லையாய் மலர்ந்து மகிழ்வினில் திளைக்கும்
***முகத்தினில் புன்னகை விரியும் !!
சியாமளா ராஜசேகர்
Thursday, May 3, 2018
உளம் விரும்பும் முத்தமிழே ...!!!
கல்தோன்றி முன்தோன்றாக் காலத்தே தோன்றிக்
***கவின்மொழியாய் உருவான செந்தமிழே வாழி !
நல்லழகு "தமிழ்"என்ற சொல்லொன்றே போதும்
***நயமாக மூவினமும் இணைந்துவந்து கொஞ்சும் !
மெல்லயினி தமிழ்மொழிதான் சிகரத்தை எட்டும்
***வியத்தக்க கலைச்சொற்கள் தனித்தமிழாய்க் கொட்டும் !
இல்லாத தேதொன்றும் இன்றமிழி லில்லை
***இருளகற்றி ஒளிகூட்டும் தமிழுக்கீ டில்லை !

உயிராகி மெய்யாகி உயிர்மெய்யு மாகி
***உதிரத்தில் உணர்வுகளில் கலந்தினிக்கும் தேனாய் !
இயலிசையாய் நாடகமாய் இளமையுடன் பாரோர்
***இதயத்தில் உயர்வாக விரிந்திருக்கும் வானாய் !
உயர்தனிச்செம் மொழியிதுகற் கண்டாய்த்தித் திக்கும்
***உளம்விரும்பும் முத்தமிழே ஒலித்திடுமெத் திக்கும் !
பயன்தரும்நல் லிலக்கணமும் இலக்கியங்கள் யாவும்
***பறைசாற்றும் பழந்தமிழின் மாண்புகளை நன்றே !

பார்போற்றும் மொழிகளிலே மூத்தமொழி யானப்
***பைந்தமிழால் அனைத்துலகும் இன்பமுறச் செய்வோம் !
ஆர்வர்டின் அரியணையில் தமிழேற்றி வைத்தே
***அதன்சிறப்பை உய்த்துணரும் நாள்தொலைவி லில்லை !
தேர்பூட்டி முத்தமிழைப் பவனிவரச் செய்து
***தேவமொழி யையுலகே கைக்கூப்ப வைப்போம் !
மார்தட்டி முழங்கிடுவோம் தமிழ்மொழிதா னென்றும்
***வற்றாத வளமையொடு விளங்குமொழி யென்றே !!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ...!!!
முத்துநகர் சுவாசிக்கும் மூச்சுக் காற்று
***முழுவதுமே நச்சாக மாறிப் போனால்
நித்தநித்தம் கண்ணீரில் போகும் காலம்
***நெஞ்சத்தைச் சுட்டெரிக்கும் நோயின் கோலம் !
யுத்தமின்றி மொத்தமாக மக்கள் மாய்வர்
***யோசித்துக் குரல்கொடுப்போம் கூடி ஒன்றாய் !
அத்தனைக்கும் காரணமாம் ஸ்டெர்லைட் என்ற
***ஆலைக்கு மூடுவிழா நடக்கச் செய்வோம் !!

உயிர்வளியும் நிலம்நீரும் மாசு பட்டே
***உயிருக்கே உலைவைக்கும் அவலம் கண்டோம் !
உயிர்குடிக்கக் காத்திருக்கும் புற்று நோயால்
***ஊர்மக்கள் படுந்துன்பம் நேரில் கண்டோம் !
உயிரான உறவுகளை இழந்து வாடி
***உறைந்துவிட்ட சோகத்தைக் கண்ணில் கண்டோம் !
உயிர்பறிக்கும் ஸ்டெர்லைட்டால் அச்சத் தோடே
***உலவுகின்ற நிலைமாற்றிக் காட்டு வோமே !

ஈரமன மில்லாத வீண ராலே
***இழப்புகளோ ஏராளம் நாளு மிங்கே !
பேரழிவு ஏற்படுமுன் விழித்துக் கொண்டு
***பேரிகையாய் முழங்கிடுவோம் பாரோர் காதில் !
நேரத்தைக் கடத்தாமல் கைகள் கோப்போம்
***நிறைவேற்ற ஒருமனதாய்ச் சபதம் செய்வோம் !
வீரமென்றும் தமிழருக்குச் சொந்த மன்றோ
***வெகுண்டெழுந்து விரட்டிடுவோம் ஊரை விட்டே !!

வளையற்சிந்து...!!!
வேலைப்போற்றி வணங்கிடவே
வெற்றிவந்து சேரும் - மன
வேதனைகள் தீரும் - மிக
வெந்தவுளம் ஆறும் - வடி
வேலவனின் திருவருளால்
மேன்மைகிட்டும் வாரும் !!
வெற்றிவந்து சேரும் - மன
வேதனைகள் தீரும் - மிக
வெந்தவுளம் ஆறும் - வடி
வேலவனின் திருவருளால்
மேன்மைகிட்டும் வாரும் !!
சோலைமலை மீதினிலே
தோகைமயில் உண்டு - அது
சுற்றியாடும் நின்று - மனம்
சொக்கிவிடும் கண்டு - மதி
சூடியோனின் மைந்தனையே
தூக்கிச்செய்யும் தொண்டு !!
தோகைமயில் உண்டு - அது
சுற்றியாடும் நின்று - மனம்
சொக்கிவிடும் கண்டு - மதி
சூடியோனின் மைந்தனையே
தூக்கிச்செய்யும் தொண்டு !!
காவடிகள் ஆடிவரக்
கண்டமனம் துள்ளும் - அது
கள்ளமின்றிச் செல்லும் - நிதம்
கந்தன்நாமம் சொல்லும் - எக்
காலத்திலும் துணையிருந்து
காவலனாய் வெல்லும் !!
கண்டமனம் துள்ளும் - அது
கள்ளமின்றிச் செல்லும் - நிதம்
கந்தன்நாமம் சொல்லும் - எக்
காலத்திலும் துணையிருந்து
காவலனாய் வெல்லும் !!
சேவற்கொடி யோனைநிதம்
சேவித்திட வாரீர் ! - திருச்
செந்தூரிலே பாரீர் - இரு
தேவியரைக் காணீர் - தினம்
தித்திக்கின்ற செந்தமிழில்
சீர்மிகவே பாடீர் !!
சேவித்திட வாரீர் ! - திருச்
செந்தூரிலே பாரீர் - இரு
தேவியரைக் காணீர் - தினம்
தித்திக்கின்ற செந்தமிழில்
சீர்மிகவே பாடீர் !!
சியாமளா ராஜசேகர்
Subscribe to:
Posts (Atom)