Saturday, April 11, 2020

பாவலருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் ...(07:04:2020)


தனதனன தனதனன தனதானா
தனதனன தனதனன தனதானா
கலைமகளின் மகனுனது தயவாலே
கவியெழுது மெளியவழி யறிவேனே
இலையெனவுன் மரபுகவி யருளாலே
இணையமதில் நிதமுலவி வனைவேனே
மலையில்விழு மருவியென மனம்பாயும்
வரதனுன தினியதமி ழுலகாளும்
நலம்பெருகி யுலகில்மகிழ் வொடுவாழ
நனையுவிழி யுடனிறையை நினைவேனே!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 💐💐💐🎉🎉🎊🎊🎂🎂🎈🎈🎁🎁🍫🍫🍟🍟🍩🍩

இனிய சந்தம் பொங்குதே ....!!!

காற்று வந்து காத லோடு
காதை யுரசும் போதிலே
நாற்று மாடு மழகில் மலரும்
நல்ல கவிதை நாவிலே
ஆற்று வெள்ளம் பெருகி யோட
அலைக ளெல்லா மாடுதே
ஊற்றெ டுக்கு மன்பி லின்ப
உறவி னிக்கும் நாளுமே !!
பூவில் வண்டு மதுவை யுண்டு
பொய்யு றக்கம் போடுதே
காவல் மீறி மானி ரண்டு
காத லுறவு கொள்ளுதே
தூவி மழைந னைத்த போது
தோகை மயிலு மாடுதே
நீவு கின்ற தென்ற லோடு
நெஞ்சம் மகிழ்வி லோடுதே!!
அந்தி மாலை மொட்ட விழ்ந்த
அழகு மலர்ம ணக்குதே !
அந்தி வான்சி வந்த காட்சி
அமைதி யாய்ம யக்குதே!
முந்தி வந்த பஞ்சு மேகம்
மூட வெயில்ம றைந்ததே!
இந்த விந்தை காணும் போது
இனிய சந்தம் பொங்குதே!!
( எழுசீர்ச் சந்த விருத்தம் )
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் ...!!!

Image may contain: 1 person

தந்த தந்த தான தந்த
தந்த தந்த தான தந்த
தந்த தந்த தான தந்த தனதானா
கொஞ்சு கின்ற வான ரங்கள்
இன்பம் பொங்க வேம கிழ்ந்து
குந்தி யன்பி லேம யங்கி மரமீதே
குன்ற மெங்கு மேறி வந்து
வண்டி ருந்த வாழை யுண்டு
கொம்பி லும்ப லாக னிந்து தரைவீழ
அஞ்சி நின்ற தோசு ருண்டு
மந்தி சென்ற தோத வழ்ந்து
மங்கு மிங்கு மாக வம்பு செயும்போதே
அந்தி வந்து சாய வுஞ்சி
வந்த மஞ்சு வானில் முந்த
அன்பு ளங்க ளோடு தென்ற லுறவாடும்
இஞ்சி மஞ்ச ளோடு குங்கு
மம்க லந்த வாச மெங்கு
மென்ற நெஞ்சி லேக னிந்து களிகூடும்
என்று மொன்ற வேநி னைந்து
சந்த தம்சி வாய வென்றெ
னெந்தை நம்பி நீறணிந்து புகழ்பாட
நஞ்சை யுண்ட வீசன் மன்றி
லன்ப னென்று தானு ணர்ந்து
நந்தி யொன்றின் மீத மர்ந்து வரும்போது
நண்ப னென்று தோள ணைந்து
சம்பு வின்மு னேப ணிந்து
நன்றி பொங்க வேக ரைந்து விடுவேனே!!
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் ...!!

Image may contain: 2 people


வண்ணப் பாடல்....!!!
*************************
தன்ன தான தன்ன தான
தன்ன தான தனதானா (அரையடிக்கு)
வெண்ணெய் போலும் மென்மை யோடு
வெண்மை யான வொளியோடே !
விண்ணு லாவி மின்னும் மாது
வெண்ணி லாவி னழகோடே !
கண்ணி லாடு கண்ண னோடு
கன்னி காத லுறவாலே !
கன்ன லாக வின்னும் பேசு
கம்ம லாடு செவியோடே !
வண்ணம் பாடும் பெண்ணை நாடி
மன்ன நீயும் வருவாயே !
மண்ணு லாவும் நுண்மி யாவும்
மண்ணி லோட விடுவாயே !
உண்ணும் போது மெண்ணம் யாவு
முன்னை நாளும் நினையாதோ !
உண்மை யோடு நன்மை தேட
ஒண்ணும் வாழ்வு முறைதானே !!
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் ...!! ( தமிழ் )

வண்ணப் பாடல்.....!!!
*************************
தந்த தனன தந்த தனன
தந்த தனன தந்தனா (அரையடிக்கு)
நெஞ்ச முருகி யன்பு பெருக
நின்று தொழுது கெஞ்சினேன்
நின்ற னடியை யென்ற னிதயம்
நெண்டி வருட வண்டினேன்
தஞ்ச மடைய வந்த வெனது
தங்க மனம டங்குமோ
சந்த மதுகு லுங்க வுனது
தண்டை யொலிசி ணுங்குமோ
கஞ்ச மலரை விஞ்சு மழகு
கண்டு மதிம யங்கினேன்
கண்ட கனவி லுன்றன் வரவு
கண்கள் வழிய வொன்றினேன்
வஞ்சி யமுது தந்த தருணம்
வண்ட மிழினை யுண்டுநான்
வந்த கவிவ னைந்து மகிழ்வில்
மங்கை யுனைவ ணங்குவேன்
சியாமளா ராஜசேகர்

நன்றி பகருவேன் ...!!!

அச்சு றுத்து நச்சு நுண்மி
அத்து மீற விடுவதா ?
உச்ச மெட்டி மக்க ளொட்டி
உக்கி ரத்தி லலைவதா?
இச்சை கொண்ட தொற்றை வெல்ல
எச்ச ரிக்கை செய்குவீர் !
மிச்ச மின்றி விட்டொ ழிப்பின்
மெச்சி நன்றி பகருவேன் !!
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் ...!!!

வண்ணப் பாடல் ...!!!
*****************************
தந்தனன தத்தனன
தந்தனன தத்தனன
தந்தனன தத்தனன தனனானா (அரையடிக்கு )
கொஞ்சிவரு நற்றமிழில்
உந்திவரு சொற்களொடு
கொண்டலென முத்தையனும் பொழிவீரே
குந்தனிடம் பற்றுடைய
அந்தமிழன் நெற்றியணி
குங்குமமும் பட்டுடையி லழகோனே !
நெஞ்சமதில் நித்தமொரு
சந்தமழை முத்துதிர
நின்றபடி நற்பனுவல் வனைவீரே !
நின்றமிழ்ம யக்கிவிடு
மெந்துயர றுத்துவிடும்
நின்புகழு மிப்புவியில் நிலைதானே !
வஞ்சமற சொற்பதமும்
பஞ்சமற கற்பனையும்
வந்துலவும் பட்டுவிரல் வழியாக !
வண்டமிழு மற்புதனை
யின்புடன ணைத்துநிதம்
மன்றினில்ம ணக்கவர மருள்வாளே !
அஞ்சனம ழித்திடுமுன்
நெஞ்சுலவு தத்துவமு
மஞ்சலென வெற்றியினை யருளாதோ ?
அன்புமிகு செட்டிமக
னுன்கவிப டிப்பவர்க
ளந்திபக லெப்பொழுதும் மகிழ்வாரே !
சியாமளா ராஜசேகர்