Tuesday, February 17, 2015

முருகா ....முருகா .... முருகா ....!!!




நீலச்சிகண்டியில் வரும் முருகனே ! 
கோலக் குறத்தி மணாளனே ! 
ஆலகண்டனின் மைந்தனே ! 
வேலனே ! கந்தனே ! குகனே ! 

அருட்கனி வேண்டி உலகைச் சுற்றி வந்தாய் ! 
அவ்வைத் தமிழில் உவகை பெற்று நின்றாய் ! 
அருணையில் அருணகிரிக்கு காட்சி தந்தாய் ! 
அலைமோதும் செந்தூரில் சூரவதம் செய்தாய் ! 

அடியவர் மனதில் அழகா நீ வசித்திடுவாய் ! 
அருணகிரி திருப்புகழில் அகமகிழ்ந்து ஆடிடுவாய் ! 
அநுபூதி பாடிவேண்ட குருவாய் வந்திடுவாய் ! 
அறுபடை வீட்டில் அனுதினம் அருள்பாலிப்பாய் ! 

அன்பால் உனைப் போற்றி துதிக்கின்றேன் ! 
என்பால் இறங்கி செவி மடுத்திடுவாய் ! 
அறியாது செய்த பிழை பொறுத்திடுவாய் ! 
சிறியேன் இனியுனைப் பிரியேன் காத்திடுவாய் ....!!

சாய்நாதரின் தாள் பணிவோம் ....!!!



பாபா நாமம் சொல்லச் சொல்ல 
பாவங்கள் பறந்தோடும் ! 
நாளும் போற்றி பக்தி செய்ய 
நற்கதி கிடைத்துவிடும் ....!! 

சத்குரு பாதம் பற்றிக் கொண்டால் 
பித்தம் தெளிவாகும் ! 
சத்சரி தம்தினம் வாசித் தாலே 
பிறவிப் பிணிதீரும்.....!! 

அன்பாய் உருகி வேண்டிக் கொண்டால் 
அபயம் அளித்திடுவார் ! 
பண்ணொடு பாடி துதித்து நின்றால் 
பக்கத்துணை இருப்பார் ....!! 

உண்மை யுடனுள மாறக் கூப்பிட 
உடனே வந்திடுவார் ! 
உதியை நித்தம் பூசிக் கொண்டால் 
உள்ளக்குறை களைவார் ....!! 

ஷீரடி நாதரின் தாள்கள் பணிய 
சிறப்புகள் தேடிவரும் ! 
ஷீரடி ஒருமுறை சென்று வந்தால் 
சீவன் முக்தி பெறும்...!! 

சகலமும் சாயி எனச்சரண் அடைந்தால் 
சங்கடம் விலகிவிடும் ! 
சர்வமும் நீயென பணிந்து விட்டால் 
சந்ததி மேன்மையுறும் ...!! 

கருணைக் கடலாம் பாபாவைத் தொழ 
கனவில் வந்திடுவார் ! 
தயாள சீலரை அழுது கும்பிட 
தரிசனம் தந்திடுவார் ....!! 

சாந்த சொரூபன் சாய்பக வானின் 
மகத்துவம் பாடிடுவோம் ! 
அல்லல் மிகுந்த வாழ்வினில் நமது 
தொல்லைகள் தொலைத்திடுவோம் ...!! 

அருமருந் தாவது பாபா வின்உதி 
அதிசயம் பலநிகழ்த்தும் ! 
பொறுமை நம்பிக்கை யுடன்வேண் டிடவே 
வேண்டுதல் நிறைவேறும் ....!! 

மதபே தமிலா மகானின் லீலைகள் 
மனதில் நிறுத்திடுவோம் ! 
சத்குரு சரணம் சரணம் என்றே
சாய்ராம் புகழ்சொல்வோம் ....!!!!


Monday, February 16, 2015

ஐயப்பன் திருப்புகழ்























கோல சுந்தர ரூபா நமோ நம
வாச சந்தன தேகா நமோ நம 
நேச புஷ்கலை நாதா நமோ நம சபரீசா 

சாத கம்புரி தீரா நமோ நம 
கான கம்புலி வேடா நமோ நம 
ஆண வம்ஒழி சூரா நமோ நம குருநாதா 

தேவ சன்னதி ஐயா நமோ நம 
வீர பந்தள வாசா நமோ நம 
பாத பங்கய பாலா நமோ நம வினைதீராய் 

சீர கம்கொடு சீலா நமோ நம 
மூல மந்திர வேதா நமோ நம 
தீப நல்லொளி சோதீ நமோ நம அருள்தாராய்

Sunday, February 15, 2015

ஆலிலை விநாயகர்

         

ஆலிலை மேலே அழகாய் அமர்ந்தவா 
பாலில்தேன் சேர்த்துப் படைத்திடுவேன் - காலினைச்‌
சிக்கெனப் பற்றினேன் செந்தூர நாயகா 
இக்கணம் நல்லருள் தா