Saturday, January 30, 2016

வழுக்கை - குறள்



கவிதை புனைய கருவும் கிடைத்தால் 
குவிப்போ மெழுதிக் குறள் . 1

அடர்ந்த முடியும் அடிக்கடிக் கொட்ட
தொடரும் வழுக்கைத் துயர் . 2

கருத்த சிகையில் கலக்கம் வருமேல் 
வருத்தி யெடுக்கும் வலி . 3

வழுக்கை விழுந்திட வாட்ட மெதற்கு
அழுக்கே யிராதே அழகு . 4

வெளுக்குமோ வென்ற விசனமே யில்லை 
பளுவின்றிக் காத்திடும் பார் . 5

முடியிலா மண்டையில் மூளை யதிகம் 
இடிந்து விடாதே இனி . 6

இரவியும் சுட்டால் எரியும் தலையும் 
சிரசினில் தொப்பி சிறப்பு . 7

சீவி விடுதற்கு சீப்புகள் தேவையோ 
கோவித் திடாமலே கூறு .   8

வழுவழு வென்றே வடிவா யிருக்கும் 
வழுக்கைத் தலையும் வனப்பு . 9

ஆலயம் சென்றால் அடித்திடும் மொட்டையின் 
கோலமே யீதன்றோ கூறு ? . 10

1 comment:

  1. அருமை. இந்தப் பாடலைப் படித்தபின் தங்கள் வலைத்தளத்தில் உள்ள மற்ற பாடல்களையும் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். வாழ்த்துக்கள்.kanithottam.blogspot.com

    ReplyDelete