Tuesday, January 12, 2021

வண்ணம் -119

 வண்ணம் : 119

தான தான தானான தானத் தனதானா
தான தான தானான தானத் தனதானா
காத லோடு தேனான பாடற் புனைவேனே
காணும் போது காராக மாறிப் பொழிவேனே
தூது போக வான்மீனை நாடத் துணிவேனே
தோழி யோடு பேசாம லூடித் தவியேனே
பாதை மீது காணாது சோர்வுற் றலைவேனே
பாவை யோடு பூபாளம் பாடிக் கனவோடே
கோதி லாது பூமாலை சூடிக் கனிவோடே
கோதை நாண மார்போடு கூடித் தழுவேனோ ?
சியாமளா ராஜசேகர்

வண்ணம் - 118

 வண்ணம் : 118

தனந்த தனனன தான தனதானா
தனந்த தனனன தான தனதானா
கடம்ப வனமிசை மேவு மெழிலாளே
கமழ்ந்த மரகத மேனி யுடையாளே
படர்ந்த தமிழ்நதி பாயு மழகூராம்
பளிங்கு மதுரையை யாளு மினியாளே
கடந்து செலுவினை யாவு மவளாலே
கலைந்து விலகிடும் வானில் முகிலேபோல்
தொடர்ந்து நிழலென நாளும் வருமீனாள்
சுகங்க ளடைமழை போலும் பொழிவாளே !!
சியாமளா ராஜசேகர்

வண்ணம் 117

 வண்ணம் : 117

தன்ன தனனன தான தனதனந் தனதான ( அரையடிக்கு )
கண்ணன் குழலிசை யோடு செலுமுளந் தனியாக
கன்னல் மொழியிரு காதி னிலொழுகுஞ் சுகமாக
வெண்ணெய் திருடிய மாய னிதழ்களும் பனியாக
மின்னும் மதியென வாயி லிளகிடும் பதமாக
வண்ண மயிலிற காட வெழில்முகங் கதைபேச
வன்னி யெனவிள மாத ரவன்வசங் களிகூர
எண்ண முழுவது மாயன் நினைவதுந் தினம்மோதும்
எண்ணி மகிழ்வதி லேயெ னிதயமுங் குதிபோடும் !!
சியாமளா ராஜசேகர்

வண்ணம் -116

 வண்ணம் : 116

*******************
தந்தன தானன தனனானா
தந்தன தானன தனனானா
அம்புலி யாயொளிர் விழியாளே
அம்பிகை யேவுனை மறவேனே
நம்பிய போதுகை விடலாமோ
நன்றிது வோவிடை தருவாயே
பம்பையி னோசையில் மருளாடு
பைங்கிளி வாயினில் மொழிபேசு
கும்பிடு வோருள முறைவாயே
குங்கும நாயகி யருள்வாயே !!
சியாமளா ராஜசேகர்

வண்ணம் 115

வண்ணம் : 115
********************
தந்தத்தன தானந்தன தனதானா
தந்தத்தன தானந்தன தனதானா
திங்கட்பிறை சூடுஞ்சிவ பெருமானாம்
சிந்திப்பவர் நேயந்தனில் மகிழ்வோனாம்
தங்கக்கழ லாடுஞ்சபை யுடையோனாம்
தந்தைக்குப தேசந்தனை அருள்வோனே
சங்கத்தமி ழோதுந்தமி ழடியார்தம்
சந்தத்தினி லாடுங்கவி னழகோனே
செங்கட்திரு மாலின்திரு மருகோனே
செந்திற்பதி வாழுந்திரு முருகோனே!!
சியாமளா ராஜசேகர்
வண்ணம் : 115
********************
தந்தத்தன தானந்தன தனதானா
தந்தத்தன தானந்தன தனதானா
திங்கட்பிறை சூடுஞ்சிவ பெருமானாம்
சிந்திப்பவர் நேயந்தனில் மகிழ்வோனாம்
தங்கக்கழ லாடுஞ்சபை யுடையோனாம்
தந்தைக்குப தேசந்தனை அருள்வோனே
சங்கத்தமி ழோதுந்தமி ழடியார்தம்
சந்தத்தினி லாடுங்கவி னழகோனே
செங்கட்திரு மாலின்திரு மருகோனே
செந்திற்பதி வாழுந்திரு முருகோனே!!
சியாமளா ராஜசேகர்வண்ணம் : 115
********************
தந்தத்தன தானந்தன தனதானா
தந்தத்தன தானந்தன தனதானா
திங்கட்பிறை சூடுஞ்சிவ பெருமானாம்
சிந்திப்பவர் நேயந்தனில் மகிழ்வோனாம்
தங்கக்கழ லாடுஞ்சபை யுடையோனாம்
தந்தைக்குப தேசந்தனை அருள்வோனே
சங்கத்தமி ழோதுந்தமி ழடியார்தம்
சந்தத்தினி லாடுங்கவி னழகோனே
செங்கட்திரு மாலின்திரு மருகோனே
செந்திற்பதி வாழுந்திரு முருகோனே!!
சியாமளா ராஜசேகர்வண்ணம் : 115
********************
தந்தத்தன தானந்தன தனதானா
தந்தத்தன தானந்தன தனதானா
திங்கட்பிறை சூடுஞ்சிவ பெருமானாம்
சிந்திப்பவர் நேயந்தனில் மகிழ்வோனாம்
தங்கக்கழ லாடுஞ்சபை யுடையோனாம்
தந்தைக்குப தேசந்தனை அருள்வோனே
சங்கத்தமி ழோதுந்தமி ழடியார்தம்
சந்தத்தினி லாடுங்கவி னழகோனே
செங்கட்திரு மாலின்திரு மருகோனே
செந்திற்பதி வாழுந்திரு முருகோனே!!
சியாமளா ராஜசேகர்

வண்ணம் -114

 வண்ணம் : 114

* * * * * * * * * * * *
தாத்தந் தனனன தனதானா
தாத்தந் தனனன தனதானா
ஆற்றங் கரைதனி லமர்வோனே
ஆக்கந் தரவரு மெளியோனே
மாற்றங் களைவிதை புவிவாழ்வில்
வாக்கிங் கருளிட வருவாயே
ஏற்றங் கொடுகரி முகனேயெம்
ஏக்கங் களுமினி விலகாதோ
கூற்றன் வருமுன மெமையாள்வாய்
கூத்தன் மகனுனை மறவோமே !!
சியாமளா ராஜசேகர்

வண்ணம் -113

 வண்ணம் :113

தத்தனா தானனத் தனதான
தத்தனா தானனத் தனதான
பச்சைநூ லாடையிற் பொலிவோடே
பத்தியோ டாடையிற் கனிவாயோ
உச்சிமா காளியைத் தொழுவேனே
உற்றநோய் தீர்வதற் கருள்வாயே
பிச்சியால் மாலைகட் டுவனேயான்
பெற்றபே றாயதைக் கருதேனோ
இச்சையால் நானுனைப் புகழ்வேனே
இற்றைநாள் மாசினைக் களைவாயே!!
சியாமளா ராஜசேகர்