இனம்விட்டு மணமுடித்தால் உறவினின்று ஒதுக்கிடுவார்
சினங்கொண்டு பொறுமையின்றி பழிவாங்கத் துடித்திடுவார்
மனங்கொத்தி ரணமாக்கி வலிகண்டு உளம்மகிழ்வார்
அனல்மேலே புழுபோலே துடிப்பதையும் ரசித்திருப்பார் !
துவண்டாலும் சரிந்தாலும் அரவணைக்க மறுத்திடுவார்
கவலையிலே உழன்றாலும் கடுகளவும் மனமிரங்கார்
சவமாகிக் கிடந்திடினும் கரையாது இறுகிநிற்பார்
புவனத்தில் கலப்புமணம் எளிதாகும் தினம்வருமோ ....???
No comments:
Post a Comment