
அனலாக வளியாக நிலமாக நீராக
ஆகாய மாய்விரிந்தாய் !
அடிபணியு மடியார்தம் இதயமதி லுறவாக
அரணாக நீநிறைந்தாய்!
ஆகாய மாய்விரிந்தாய் !
அடிபணியு மடியார்தம் இதயமதி லுறவாக
அரணாக நீநிறைந்தாய்!
கனிவோடு சிவனென்று நாவிலே சொல்பவர்
கவலைகள் கருகிடாதோ?
கயிலைமலை வாசனே! எமையாளு மீசனே !
கண்மூன்று கொண்டபரமே !
கவலைகள் கருகிடாதோ?
கயிலைமலை வாசனே! எமையாளு மீசனே !
கண்மூன்று கொண்டபரமே !
உனைநம்பி வருவோரை அன்போடு வினைநீக்கி
உயர்வொடு வைத்தசிவனே !
உள்மனத் தொட்டியில் கழிவுகள் நீக்கியென்
ஊனத்தை மாற்றிவிடுவாய்!
உயர்வொடு வைத்தசிவனே !
உள்மனத் தொட்டியில் கழிவுகள் நீக்கியென்
ஊனத்தை மாற்றிவிடுவாய்!
இனியனே! கதியென்று நின்கழற் பற்றினேன்
எளியேனை ஈடேற்றுவாய்!
இயலிசையு மாகமுத் தமிழூட்டி வளமையாய்
என்னையும் பாடவைப்பாய் !!
எளியேனை ஈடேற்றுவாய்!
இயலிசையு மாகமுத் தமிழூட்டி வளமையாய்
என்னையும் பாடவைப்பாய் !!
( பன்னிருசீர்ச் சந்த விருத்தம் )
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment