நித்தம் எழுதிக் குவித்திடவே
***நீலக் குருதி நிரப்பிவிட்டேன் !
சத்த மின்றித் தன்பணியைச்
***சலிப்பே யின்றி அதுசெய்யும் !
எத்தர் மிகுந்த உலகத்தில்
***எழுத்தால் புரட்சி செய்துவிடும் !\
கத்தி முனைபோல் கூர்மிகுந்து
***கதற கதறக் கிழித்துவிடும் !
சிவப்புக் குருதி சிந்தாமல்
***செம்மை யாகப் புரட்சிசெயும் !
துவட்டி யெடுக்கும் எழுத்துகளால்
***துணிச்ச லோடு நிதம்தாக்கும் !
தவறு நேர்ந்தால் தயக்கமின்றித்
***தட்டிக் கேட்க முன்னிற்கும் !
அவல ஆட்சி கண்டிடிலோ
***அரசைக் கூடக் கவிழ்த்துவிடும் !
கொடுமை கண்டால் கொதித்தெழுந்துக்
***கொளுத்திப் பற்ற வைத்துவிடும் !
அடுப்பில் எரியும் விறகனைய
***அனற்சொல் லாலே பொசுக்கிவிடும் !
கெடுக்கும் தீய சக்திகளைக்
***கிள்ளி யெறியத் துணையிருக்கும் !
ஒடுக்கும் வரையில் ஓயாமல்
***ஒலிக்கும் நீலக் குருதியுமே !!!
No comments:
Post a Comment