சொக்கனுடன் மீனாளின் மணக்கோலம் கண்டேன்
துன்பமெல்லாம் தீர்ந்தாற்போல் தன்னிறைவு கொண்டேன் !
திக்கெட்டும் நலம்சூழ நான்வேண்டு கின்றேன்
தித்திக்கும் செந்தமிழில் புகழ்பாடு கின்றேன் !
முக்கனியின் சாறெடுத்துத் தேன்கலந்து தந்தேன்
முப்பொழுதும் உன்னிழலில் இடங்கேட்டு நின்றேன்!
நெக்குருகி நீர்மல்கப் பதம்பற்றிக் கொண்டேன்
நெஞ்சத்தின் குறைகளைய வாராயென் தாயே!!

சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment