Pages

Tuesday, November 7, 2017

உன்னையன்றி யாருமில்லை ....!!!

இரவு தூங்கும் நேரத்தில்
இனிய கனவு பூத்ததடி!
பரம சுகத்தில் திளைத்திருந்தேன்
பார்த்த யாவும் மறந்ததடி!
வரவில் சிலிர்த்தேன் ண்நிலவே
வருடிச் சென்றாய் ஒளிவீசி!
உரிமை யோடு கதைபேச
உன்னை யன்றி யாருமில்லை!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment