Pages

Tuesday, January 12, 2021

வண்ணம் -120

 வண்ணம் : 120

தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த தனதான ( அரையடிக்கு )
ஆடுமயி லேறி வந்து சூரனொடு போர்பு ரிந்த
ஆதி சிவனாரின் மைந்த னருளாலே
ஆணவமெ லாம ழிந்து பாழுலகி லேயு ழன்றென்
ஆசைகளெ லாந்து றந்து விடுவேனோ
காடுபுகு வேளை யன்பி லேயிளகி யோடி வந்து
காலடியி லேம யங்கி விழும்போதில்
காயமிதை யேபி ரிந்து வீடுபெற வேப ரிந்து
காலனொடு பேசி நின்ற வடிவேலா
வாடுமுயிர் யாவு முன்றன் மாவருளி னாலொ ளிர்ந்து
வாழவழி நாடு கின்ற புவிமீதில்
வாசமிகு பூவ ணிந்த வேழமக ளோடி ணைந்து
மான்மகளு மாட விங்கு வருவாயே !
பாடுமடி யாரின் நெஞ்சி லாடிவிளை யாடு கின்ற
பாலனுனை யேபு கழ்ந்து பணிவேனே
பாடுகையில் நீநெ கிழ்ந்து பூமழலை யாய்நி னைந்து
பாதநிழ லேம கிழ்ந்து தரவேணும் !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment