Pages

Tuesday, January 12, 2021

வண்ணம் -116

 வண்ணம் : 116

*******************
தந்தன தானன தனனானா
தந்தன தானன தனனானா
அம்புலி யாயொளிர் விழியாளே
அம்பிகை யேவுனை மறவேனே
நம்பிய போதுகை விடலாமோ
நன்றிது வோவிடை தருவாயே
பம்பையி னோசையில் மருளாடு
பைங்கிளி வாயினில் மொழிபேசு
கும்பிடு வோருள முறைவாயே
குங்கும நாயகி யருள்வாயே !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment