Pages

Tuesday, January 12, 2021

வண்ணம் - 105



தத்தத் தனான தனதான
தத்தத் தனான தனதான
முத்துக் குமார வடிவேலா
முட்டுப் படாது புகழ்பாட
முத்திக் குஞான மருளாயேல்
முற்றுப் பெறாது புவிவாழ்வே!
மொத்தத் திலாசை விடுவேனோ
முக்கட் பிரானி னெழில்நேசா
சித்தத் துளாடு மழகேசா
தித்திக் கவாசி யருள்வாயே!!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment