Pages

Friday, May 8, 2020

வண்ணப் பாடல் ...!!! ( காதல் )


தன்னான தன்னானத் தனதானா
தன்னான தன்னானத் தனதானா
பொன்மேகம் பன்னீரைப் பொழியாதோ
பொன்னான மண்மீதிற் கலவாதோ
மன்னாதி மன்னாமற் சரமேனோ
மண்ணாசை யிந்நாளிற் றகுமோசொல்
என்னோடு கண்மூடித் தனமேனோ
என்னாசை யெண்ணாமற் கனியாதோ
என்னாவி கண்ணீரிற் கரையாமல்
எந்நாளும் பெண்மானைத் தழுவாயோ!
மற்சரம் - போட்டி, பொறாமை
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment