Pages

Saturday, April 11, 2020

வண்ணப் பாடல் ...!!!

No photo description available.

தான தான தானான தானத் தனதான
தான தான தானான தானத் தனதான
ஈச னாரை நாள்தோறும் பாடித் தொழுவேனே
ஈடி லாத தேவார மோதிக் கனிவோடே !
நீச ரோடு நாயேனும் மோதற் றகுமோசொல்
நீடு வாழ வேறாரை நாடித் திரிவேனே !
காசி நாத னேநீறு பூசித் தெளிவோடே
கால னோடு போராட நீசற் றருளாயோ !
வாசம் வீசு பூமாலை தோளிற் பொலிவோடே
மாசி லாத மீனாளின் நேயப் பெருமானே ..
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment