Pages

Monday, March 23, 2020

என்றுமிலை குறைவே!!!

புள்ளிமான்கள் சூழ்ந்திருக்க அழகான பெண்மான்
புன்னகைத்துப் பரிவுடனே அவற்றோடு பேசும்!
கள்ளமில்லாக் கன்னியவள் காதலனைக் காணக்
கானகத்தில் காத்திருக்கும் வேளையிலும் கூடத்
துள்ளியோடும் மானினமும் துடிப்போடு சேர்ந்து
துணையாகச் சுற்றிநின்றே அவன்வரவைத் தேடும் !
உள்ளத்தில் அன்பிருந்தால் எவ்வுயிரும் உறவே
உண்மையிதை உணர்ந்துகொண்டால் என்றுமிலை குறைவே!!!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment