அன்பிற் குரியவன் பண்பிற் சிறந்தவன்
அழகில் மன்மதன் !
கன்னல் மொழியினன் பழக இனியவன்
கருணை மனத்தினன் !
பொன்னின் நிறத்தவன் பூப்போல் உளத்தவன்
பொலிவில் சுந்தரன் !
என்றன் மகனிவன் என்றும் நலத்துடன்
இனிதே வாழ்கவே !!
கண்ணின் மணியென மனைவி மக்களைக்
கருதும் தூயவன் !
எண்ணம் முழுதும் பிறருக் குதவிடும்
இதயம் படைத்தவன் !
அண்ணன் தம்பியர் அக்கா தங்கையர்
அன்பில் நனைபவன் !
வண்ணக் கனவுகள் விரிய புவியினில்
வாழ்க வாழ்கவே !!
அன்புமகன் விஜய் -க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 









No comments:
Post a Comment