Pages

Tuesday, May 8, 2018

நீலக் கடலினிலே ....!!!


நீலக் கடலினிலே நீந்திக் களிப்புடன் 
ஓலமிட்டுத் துள்ளியாடி உற்சாகம் பொங்க 
விரைந்துவரும் சிற்றலைகள் வெண்நுரைக ளாகக் 
கரையினை முத்தமிட்டுக் காதலுடன் செல்ல 
விரிந்தவான் தானும் வியப்பினி லாழும் 
கரிக்கும் கடலினைக் கண்டு. 
( பஃறொடை வெண்பா) 

சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment